உள்ளூர் செய்திகள்
மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு
- தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
- மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மயிலாடுதுறை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக மழை பெய்துள்ளது. தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன. மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.