உள்ளூர் செய்திகள்

மளிகை கடையில் 5 பவுன் நகை திருட்டு

Published On 2023-07-16 15:30 IST   |   Update On 2023-07-16 15:30:00 IST
  • சம்பவத்தன்று அந்த தங்க செயின் அறுந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை கழற்றி கடையில் உள்ள மேஜையின் மீது வைத்திருந்தார்.
  • ஜெயக்கொடி மேஜையின் மீது வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை.

தருமபுரி,

தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது67). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஜெயக்கொடி தனது கழுத்தில் 5 பவுன் தங்க செயின் ஒன்றை அணிந்து இருந்தார். சம்பவத்தன்று அந்த தங்க செயின் அறுந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை கழற்றி கடையில் உள்ள மேஜையின் மீது வைத்திருந்தார்.

அப்போது மளிகை கடைக்கு பொருள் வாங்க ஒருவர் வந்தார். அவர் பொருளை வாங்கி சென்ற பின்பு ஜெயக்கொடி மேஜையின் மீது வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் கடையில் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அந்த நகை கிடைக்கவில்லை.

இது குறித்து ஜெயக்கொடி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் கடையில் மேஜையின் மீது வைத்திருந்த தனது 5 பவுன் செயினை மளிகை பொருட்கள் வாங்க வந்த நபர் திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News