உள்ளூர் செய்திகள்

முறையான ஆவணங்கள் இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்த 5 ஆட்டோக்கள் பறிமுதல்

Published On 2023-09-05 09:03 GMT   |   Update On 2023-09-05 09:03 GMT
  • தனியார் நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரம் இல்லாமல் பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
  • புகாரின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா தலைமையில், பணியாளர்கள் இன்று காலையில் எட்டயபுரம் பகுதிக்குள் வரும் குடிநீர் வாகனங்களை பரிசோதனை செய்தனர்.

எட்டயபுரம்:

எட்டயபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க தனியார் நிறுவனங்கள் தங்களுடைய மினி ஆட்டோவில் ரூ.10, 15, 20 விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரம் இல்லாமல் பல்வேறு தொற்று நோய்களை உருவாக்கும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் பணியா ளர்கள் இன்று காலையில் எட்டயபுரம் பகுதிக்குள் வரும் குடிநீர் வாகனங்களை பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் வாகன ங்களில் உணவு பாதுகாப்பு தர சான்றிதழ், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு துறையிலும் அனுமதி பெறாமல் குடிநீர் விநியோகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து 5 தனியார் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பிளீச்சிங் பவுடர் போட்டு மீண்டும் திரும்ப அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News