உள்ளூர் செய்திகள்
ஓசூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 4,989 மது பாட்டில்கள் அழிப்பு
- 4989 மதுப்பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
- கடத்தல்காரர்களிடமிருத்து பறிமுதல் செய்யப்பது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் வனப்ப குதியில் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த 3 மாதங்களில் கடத்தி வரப்பட்டு, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 4989 மது பாட்டில்கள் முழுவதையும் நீதிமன்ற உத்தரவுப்படி ஓசூர் அருகே சானமாவு வனப் பகுதியில் நேற்று மாலை, மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் முன்னி லையில், மதுவிலக்கு போலீசார் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.