உள்ளூர் செய்திகள்

தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தியில் 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

Published On 2023-05-24 14:29 IST   |   Update On 2023-05-24 14:29:00 IST
  • தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று மற்றும் இன்றும் நடைபெறுகின்றது.
  • அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தருமபுரி,

தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட த்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1432-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று முதல் 26.5.2023 வரை வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று மற்றும் இன்றும் நடைபெறுகின்றது.

அதன்படி நேற்றைய தினம் தருமபுரி வட்டத்திற்குட்பட்ட வெள்ளே கவுண்டன் பளையம், விருப்பாட்சிபுரம், கடகத்தூர், அளேதருமபுரி, ஏ.ரெட்டிஅள்ளி, கே.நடுஅள்ளி, அதகப்பாடி, பாப்பிநாயக்கனஅள்ளி, அன்னசாகரம், உங்குரானஅள்ளி, முக்கல்நாயக்கனஅள்ளி, மிட்டாநூலஅள்ளி தொகுதி, செட்டிக்கரை, நல்லனஅள்ளி, செம்மன்டகுப்பம், குப்பூர் ஆகிய 16 வருவாய் கிராமத்திற்கான தீர்வாயம் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வருவாய் தீர்வாயத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 472 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன.

வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரி வசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை கருவிகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News