உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 46 பேர் சிக்கினர்

Published On 2023-08-15 15:34 IST   |   Update On 2023-08-15 15:34:00 IST
  • சிங்காரப்பேட்டை, மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • மத்தூர் பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடையில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.

அதன்படி ஓசூர், மத்திகிரி, பாகலூர், சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம் பட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், சூளகிரி, பர்கூர், கந்திகுப்பம் பாரூர், நாகரசம்பட்டி, ராயக்கேர்டடை, உத்தனபள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடையில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த கெலமங்கலம் சீனிவாசன் (வயது35), சிங்காரப்பேட்டை ஜாவித் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யபட்டன.

இதே போல கஞ்சா விற்றதாக ஓசூர் வாசவி நகர் குல்லா (20), தளி சாலை சுதர்சன் (23), சிகரலப்பள்ளி கோவிந்தசாமி (40), தம்ம கவுண்டனூர் பவுனம்மாள் (60) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News