உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான 4 மாணவர்கள்

Published On 2023-11-21 09:15 GMT   |   Update On 2023-11-21 09:15 GMT
  • தனிப்படை போலீசார் தேடுகிறார்கள்
  • 4 பேரும் நேற்று இரவு சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததாக தகவல்

அருவங்காடு,

குன்னூர் அருகே உள்ள கிளிஞ்செடா எம்.ஜி.ஆர் காலனி சதீஷ் மகன் டேவிட் ஜான் (வயது 15), பாரதி நகர் பாலகிருஷ்ணன் மகன் தர்ஷன் (வயது 15), கிருஷ்ணன் மகன் குணா (வயது 15), முரளி மகன் கதிரேசன் (வயது 15 ) ஆகிய 4 பேரும் சேலாஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்ப வில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

இதற்கிடையே மாயமான ஒரு மாணவனின் வீட்டில் இருந்து கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எங்கள் பெற்றோர்கள் ஒழுங்காக படிக்க வேண்டுமென கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் எங்களை திட்டுவதுடன் அடிக்கவும் செய்கின்றனர்.

எனவே எங்களுக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் நாங்கள் 4 பேரும் வீட்டை விட்டு வெளியேறுகிறோம். எங்களைத் தேட வேண்டாம், மேலும் போலீ சாரிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கொலகொம்பை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மாயமான 4 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள் 4 பேரும் நேற்று இரவு சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், பின்னர் அங்கு வந்த ஒரு பஸ்சில் ஏறி வெளியூர் சென்றதாகவும் தெரியவந்து உள்ளது.

எனவே தனிப்படை போலீசார் நீலகிரி மட்டு மின்றி கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள போலீசாருடன் ஒருங்கிணைந்து மாயமான 4 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News