உள்ளூர் செய்திகள்
வாசுதேவநல்லூரில் பெண் கஞ்சா வியாபாரி உள்பட 4 பேர் கைது
- வாசுதேவநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- 4 பேரையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாரியம்மன் கோவில் அருகே கலைஞர் காலனியை சேர்ந்த சுடலை ராஜ் (வயது 42) மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி (30), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (21), கடையநல்லூர் மலையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சல்மான் பாரிஸ் ஆகிய 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
கைது
போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் 600 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.