உள்ளூர் செய்திகள்

சென்னையில் 366 புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன- 100 கழிப்பறைகளை கட்டும் பணி தீவிரம்

Published On 2023-05-08 07:43 GMT   |   Update On 2023-05-08 08:35 GMT
  • தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் சாத்தியக்கூறுகள் ஆராயப் பட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை:

சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 954 பொது கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை பொது மக்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

பொது மக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பதற்காகவும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிப்பது, புதிய கழிப்பறைகளை கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 492 இடங்களில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 366 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 100 கழிப்பறைகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 26 கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 2023-24ம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 352 இடங் களில் 1046 இருக்கைகளுடன் 215 புதிய கழிப்பறைகளும், 265 புதிய சிறுநீர் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிப்பறைகள் கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் சாத்தியக்கூறுகள் ஆராயப் பட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News