புதிய பாரத எழுத்தறிவு தேர்வில் 35 ஆயிரம் பேர் பங்கேற்பு
- 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படுகிறது.
- புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 என்ற வயது வந்தோருக்கான புதிய கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படுகிறது. இதற்காக புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 என்ற வயது வந்தோருக்கான புதிய கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கடந்த நவம்பர் மாதம், டிசம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 21 கல்வி வட்டாரங்களிலும் 35,781 பேர் கண்ட றியப்பட்டனர். தொடர்ந்து இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்தவர்கள், பட்டதாரிகள் என சுமார் 1800-க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டனர். அந்தந்த வட்டாரங்களில் உள்ள ஆசிரிய பயிற்றுநர்கள், இவர்களை ஒருங்கிணைத்து இத்திட்டத்தினை செயல்படுத்தினர்.
இதனை தொடர்ந்து தேர்வு நேற்று 1970 மையங்க ளில் நடந்தது. அதில் 35 ஆயிரத்து 781 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு எழுதினர். விடைத்தாள் அந்தந்த வட்டார வளமைய அலுவல கத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை விடைத்தாள்களை திருத்தி ஏ, பி, சி- என மதிப்பெண் கிரேடு வழங்கப்படும். இதையடுத்து தேர்வர்களுக்கு அரசு சார்பில் அடிப்படை எழுத்தறிவு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்