உள்ளூர் செய்திகள்

தஞ்சை அழகிகுளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியை மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் மேலும் 35 குளங்கள் தூர்வாரப்படும்

Published On 2023-08-23 10:36 GMT   |   Update On 2023-08-23 10:36 GMT
  • புது ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.
  • தஞ்சையில் அழகிகுளம் உள்பட 10 குளங்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் பல பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டன.

அந்த வகையில் தஞ்சை கீழவாசல் கவாஸ்காரத் தெருவில் உள்ள அழகி குளத்தை சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள கரைகளை சீரமைத்து, சுற்றுச்சுவர், பேவர் பிளாக் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.

இதனை கடந்த மாதம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் காட்சியளித்த அழகி குளத்தில் மேயர் சண் .ராமநாதனின் துரித நடவடிக்கையால் புது ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.

இதன் மூலம் அழகி குளத்தில் தண்ணீர் நிரம்பி புதுப்பொ லிவுடன் காட்சியளிக்கும்.

இதனை தொடர்ந்து இன்று அழகிகுளத்தை மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவதை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தண்ணீரில் பூக்கள் தூவி வரவேற்றார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தஞ்சையில் அழகிகுளம் உள்பட 10 குளங்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் புதுப்பொ லிவுடன் காட்சியளிக்கிறது.

நடை பாதை உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.

அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி உள்ளது.

இதனால் தண்ணீர் நிரம்பி அழகி குளம் காட்சியளிக்கும்.

இது தவிர தஞ்சையில் மேலும் 35 குளங்கள் புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்ப ட்டு வருகிறது. அந்தக் குளங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரி பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர்கள் செந்தில்குமாரி , லெனின், தி.மு.க. பகுதி செயலாளர் கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட அமைப்பாளர் ராணி கண்ணன், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா வெங்கட்ராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பி புது பொலிவுடன் மாற்றிய மேயர் சண் ராமநாதனை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News