உள்ளூர் செய்திகள்

மரக்காணம் பகுதியில் 30 கிராமங்கள் இருளில் மூழ்கியது

Published On 2023-06-07 07:31 GMT   |   Update On 2023-06-07 07:31 GMT
  • மரகிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு, ஆலப்பாக்கம், முறுக்கேறி, பிரம்மதேசம், எண்டியூர், கந்தாடு ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்கம்பம், மாமரங்கள், பலாமரங்கள், தைல மரங்கள் போன்றவைகள் மின் வயரில் விழுந்து சேதமானது. இதனால் மின்சாரம் அடியோடு நிறுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 30 கிராம மக்கள் மின்சாரம் இன்றி இரவு முழுவதும் அவதிக்குள்ளாகினர். ஊரணி கிராம சாலை முழுவதும் மா மரங்கள் விழுந்து மின்கம்பம் உடைந்து போக்குவரத்து அடியோடு துண்டி க்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழி குப்பம் கிராமத்தில் மர கிளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மரக்காணம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மர கிளை களை அப்புறப்ப டுத்தினார்கள். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மரக்காணம் பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மரக்காணம் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Tags:    

Similar News