உள்ளூர் செய்திகள்

யானைகள் சேதப்படுத்திய வாழைத்தோட்டத்தை படத்தில் காணலாம்.

3 காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம்

Published On 2023-03-30 10:03 GMT   |   Update On 2023-03-30 10:03 GMT
  • விளைநிலங்களில் யானைகள் புகாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • யானைகளை தாங்கள் எப்படி விரட்டியடிக்க முடியும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே கெங்கபாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு 3 காட்டுயானைகள் புகுந்தது. அந்த யானைகள் அங்குள்ள விவசாயிகள் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, நெல், தக்காளி உள்ளிட்ட விளைபயிர்களை உண்டும், மிதித்தும் சேதபடுத்தியது. இதனை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். முக்கியமாக வாழை தோட்டத்தை அதிக அளவில் காட்டு யானைகள் நாசம் செய்துள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் நாங்கள் கடன் வாங்கி முதலீடு செய்து அரும்பாடுபட்டு உழைத்து தயார் செய்து வந்த விளைபயிர்களை, யானைகள் இப்படி சேதப்படுத்தி இருக்கிறது. இதனால் லட்சகணக்கிலான ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

யானைகளால் மனிதர்க ளுக்கும், மனிதர்களால் யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் போது மட்டும் விரைந்து வரும் அதிகாரிகள், விளைபயர்களை யானைகள் சேதப்படுத்தி இருப்பதை எட்டி கூட பார்ப்பதில்லை.

யானைகளை தாங்கள் எப்படி விரட்டியடிக்க முடியும். விளைநிலங்களில் யானைகள் புகாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விளைபயிர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வனத்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News