உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2023-06-30 15:19 IST   |   Update On 2023-06-30 15:19:00 IST
  • பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், தப்பூட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு தூங்க சென்ற மாணவி காலையில் காணவில்லை.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், பி.குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோட்டப்பட்டி அருகே உள்ள பயர்நாயக்கம்பட்டியில் உள்ள தாய்மாமா வீட்டில் தங்கி நரிப்பள்ளி யில் உள்ள அரசு மேல்நிலை ப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 28-ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரித்த போது ஆசிரி யர்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

இது குறித்து மாணவியின் கோட்டப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

அதேபோல் தருமபுரி மாவட்டம் நவலை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி.

இவர் பாப்பாரப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 26-ம் தேதி கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் கம்பை நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News