உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது

Published On 2023-06-04 15:20 IST   |   Update On 2023-06-04 15:20:00 IST
  • 3 தனிப்படை அமைக்கப்பட்டு, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
  • கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேதகிரி (வயது31). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12-ம் தேதி பணிக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 14 பவுன் தங்க நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து வேதகிரி, பர்கூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்படி, பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நடேஷ்குமார் (39), பெங்களூர் திலக் நகர் திலீப்குமார்(35), பர்கூர் துரைஸ் நகர் தினேஷ்குமார் (30) ஆகியோரை கைது செய்துஅவர்களிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மீட்டு, தொடர்ந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News