உள்ளூர் செய்திகள்

காணாமல் போன 3 மாணவர்களை 36 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசார்

Published On 2022-09-12 15:03 IST   |   Update On 2022-09-12 15:03:00 IST
  • பல்வேறு இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
  • மாணவர்கள் திருச்சியில் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து போலீசார் திருச்சி சென்று 3 மாணவர்களையும் மீட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே பி.சி.புதூரை சேர்ந்தவர் திம்மராஜ். இவருடைய மகள் பசவராஜ் (வயது13).

இவர் தாசினாவூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பசவராஜூடன், அதே பள்ளியில் தங்காடி குப்பத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் ஹரிபிரசாத் (13), குமார் என்பவரின் மகன் ஹரீஷ் (13) ஆகியோர் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 மாணவர்களும் டியூசன் செல்வதாக சென்றவர்கள் மாயமானார்கள். அவரை எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

இது குறித்து அவர்கள் பெற்றோர் மகராஜகடை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மாணவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் நாரலப்பள்ளி கூட்டு ரோடு அருகில் கிருஷ்ணகிரி செல்லும் அரசு பஸ்சில் சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் மாணவர்கள் திருச்சியில் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து போலீசார் திருச்சி சென்று 3 மாணவர்களையும் மீட்டனர்.

மாணவர்கள் காணாமல் போய் 36 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார்.

Tags:    

Similar News