பிளஸ்-2 மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்
- மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
- கடந்த 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கரடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவருடைய தந்தை திருப்பூரில் வேலை செய்து வருகிறார். மாணவி தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாண வியை தேடி வருகின்றனர்.
அதேபோல் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள வடகரை பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் ஜம்மன அள்ளி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு பால் எடுத்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
அதேபோல் மொரப்பூர் அருகே உள்ள வகுத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி அகிலா (வயது36). இருவருக்கும் மோஜித் என்ற மகன் உள்ளார்.
கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அகிலா எம்.தோட்டம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் 7 வருடமாக வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியோர்கள் சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைத்தனர்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வீட்டை வீட்டு வெளியே சென்ற அகிலா வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.