உள்ளூர் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள் பயன் பெற்றனர்

Published On 2023-01-16 09:40 GMT   |   Update On 2023-01-16 09:40 GMT
  • ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.
  • மேலும் சாலை விபத்துகளில் 48,371 பேரும், பிரசவத்திற்காக 88,121 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

சேலம்:

சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் குமரன் கூறுகையில், கடந்த ஆண்டு மட்டும் தர்மபுரி 38,413, ஈரோடு 57472, சேலம் 81,090, நாமக்கல் 36,203, கிருஷ்ணகிரி 48430 என மொத்தம் 2,61,610 நோயாளிகள் ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்து உள்ளனர். மேலும் சாலை விபத்துகளில் 48,371 பேரும், பிரசவத்திற்காக 88,121 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

இதில் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களை அழைத்து வரும்போது, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே 365 கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்பவர்களுக்கு, குறைந்தபட்சம் 13 நிமிடங் களில் சம்பவ இடத்திற்கு சென்று விடுவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News