உள்ளூர் செய்திகள்
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களை படத்தில் காணலாம்.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தடை செய்ய கோரி அனுமதி மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது
- கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
- திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
கடலூர்:
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் தடை செய்யக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து போலீசார் 2 பெண்கள் உட்பட 25 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.