உள்ளூர் செய்திகள்

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யு.ஜி.சி. எச்சரிக்கை

Published On 2022-08-27 10:36 GMT   |   Update On 2022-08-27 10:36 GMT
  • யு.ஜி.சி.யின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்ப–டுகின்றன.
  • முைறயாக அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும்.

சேலம்:

பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி.யின் கட்டுப்பாட்டில், நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்ப–டுகின்றன.ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பட்டப்படிப்புகளை நடத்த, யு.ஜி.சி.யின் ஒப்புதல் பெற வேண்டும். முைறயாக அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும்.

21 போலி பல்கலைக்கழகங்கள்

இந்த நிலையில் நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் உரிய அங்கீகாரமின்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 21 போலி பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியலை யு.ஜி.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பக்கத்து மாநிலங்களான கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், புதுச்சேரி ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிறுவனம், ஆந்திராவில் கிறிஸ்ட் நியூ டெஸ்ட்மென்ட் நிகர்நிலை பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா ராஜா அரபிக் பல்கலைக்கழகம், கர்நாடகாவில் படகன்வி சர்கார் வேர்ல்டு திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

வேண்டுகோள்

உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் இந்த 21 பல்கலைக்கழகங்களிலும் உள்ள படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேர வேண்டாம் என யு.ஜி.சி. கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News