உள்ளூர் செய்திகள்
பேரணியை காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் சுகந்தி தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

காயல்பட்டினத்தில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-04 14:42 IST   |   Update On 2022-06-04 14:42:00 IST
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எனது குப்பை எனது பொறுப்பு என்ற நோக்கத்தில் அலியார் தெருவில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வாவு வஜீஹா மகளிர் கல்லூரி மாணவிகளின் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் ஒருங்கிணைந்த தூய்மை பணி நடந்தது.

இதில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். தொடர்ந்து வாகனங்கள் மூலம் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் விநியோகம் ஆகிய நடவடிக்கைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளில் காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, துணை தலைவர் சுல்தான் லெப்பை, நகராட்சி ஆணையாளர் சுகந்தி, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News