உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடந்தது.

சியாமளா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-04 14:34 IST   |   Update On 2022-06-04 14:34:00 IST
மயிலாடுதுறையில் சியாமளா தேவி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை டவுன் மயூரநாதர் பெரிய கோயில் அருகே பழமை வாய்ந்த சியாமளா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மயிலாடுதுறை காவல் தெய்வங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. பழமைவாய்ந்த இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைக நிறைவடைந்ததை தொடர்ந்து.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தப்படி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு. வேத விற்ப்பனர்கள் மந்திரங்கள் ஓத, கருடன் வட்டமிட வானவேடிக்கையுடன் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

 தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து கருவறையில் உள்ள அம்மன் திருவுருவ சிலைக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் விழாக் குழுவின் கவுரவத் தலைவர் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. சுவாமிநாதன், தலைவர் டி.வாசு, செயலாளர்கள் சீனிவாசன், சௌமியன், பொருளாளர் பத்மநாபன், துணைத் தலைவர் முருகதாஸ், நகரமன்ற உறுப்பினரும், துணைச் செயலாளருமான சதீஷ்குமார் மற்றும் நகர மன்ற தலைவர் செல்வராஜ் என ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News