உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-06-03 15:37 IST   |   Update On 2022-06-03 15:37:00 IST
சங்கரன்கோவிலில் மருத்துவமனை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் வயது (வயது24). கார்த்திக் போலீஸ் வேலைக்கு செல்வதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.

 இவரது தங்கைக்கு பிரசவ வலி ஏற்படவே சங்கரன்கோவில் தியேட்டர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது கார்த்திக் அங்கு தங்கி உதவி செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். 

பின்பு அதிகாலை வந்து பார்க்கும்போது மருத்துவமனை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் மோட்டார்சைக்கிளை கண்டுபிடிக்க முடியாததால் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகார் கூறினார். 

புகாரின்பேரில் சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கரன்கோவில் பகுதியில் தொடர்ச்சியாக வீடுகள் மற்றும் தெருக்களில் நிறுத்தியிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News