உள்ளூர் செய்திகள்
கடத்தூரில் கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடத்தூரில் கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

Published On 2022-06-03 15:28 IST   |   Update On 2022-06-03 15:28:00 IST
கடத்தூரில் கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி, 

தருமபுரி மாவட்ட கறி கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கறி கோழி வளர்ப்புக்கு உரிய தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடத்தூரில் வேலைநிறுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் சுரேஷ்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் டாக்டர் பன்னீர், பொறுப்பா ளர்கள் கோவிந்தசாமி, சேகர், சென்னப்பன், ராம கிருஷ்ணன், கென்னடி, முருகேசன், பெரியசாமி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்பொழுது வழங்கிவரும் கறி கோழி வளர்ப்பிற்கான  6 ரூபாய் 50 பைசா தொகையை உயர்த்தி 12 ரூபாய் 50 பைசாவாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றும் வரை கறி கோழிக் குஞ்சுகள் வளர்க்க பண்ணை களில் கோழிகள் இறக்க போவதில்லை என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழக அரசு கம்பெனி யாளர்களை அழைத்து பண்ணையாளர்களுக்கு உரிய தொகை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News