உள்ளூர் செய்திகள்
காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு வந்த நீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு வந்த மேட்டூர் நீர் - விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு

Published On 2022-06-03 15:07 IST   |   Update On 2022-06-03 15:07:00 IST
சீர்காழி அருகே மேலையூரில் உள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு வந்த மேட்டூர் நீைர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் உள்ள கடைசி கதவணை வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.

ஒவ்வொரு வருடமும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இந்த கடைசி கதவனையை வந்தடையும். அவ்வாறு இந்த ஆண்டு மேட்டூரில் கடந்த 24ம் தேதி தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் 10 நாட்களில் இக்கதவணையை இன்று வந்தடைந்தது. கதவணை வந்தடைந்த காவிரி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை உபகாட்ட செயற் பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் விவசாயிகள் படையலிட்டும், மலர்தூவியும் வணங்கி வரவேற்றனர்.

இக்கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். 

இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

தண்ணீர் வந்தடைந்தது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு உரிய நேரத்தில் காவிரி தண்ணீர் வந்து சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 20 நாட்களுக்கு முன்னரே கிடைத்துள்ளதால் மகிழ்சியோடு கூடுதல் பரப்பளவில் சாகுபடியை தொடங்குவோம் என தெரிவித்தனார்.அதே நேரம் முறைவைக்காமல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News