உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் வங்கியை முற்றுகையிட்ட 24 பேர் கைது
குமாரபாளையத்தில் வங்கியை முற்றுகையிட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:
அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம் சார்பில் குமாரபாளையம் ஸ்டேட் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நகர செயலர் அசோகன் தலைமையில் நடந்தது.
போராட்டத்தில் மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வேலை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.