உள்ளூர் செய்திகள்
தார்சாலை-வாய்க்கால் அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தார் சாலை - வாய்க்கால் பணி நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-05-30 15:00 IST   |   Update On 2022-05-30 15:00:00 IST
உருளையன் பேட்டை முல்லை நகர் பகுதியில் ரூ.28 லட்சம் செலவில் தார் சாலை - வாய்க்கால் பணியை நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் விரிவு   மூவேந்தர் வீதி, தாமரை வீதி ஆகிய 2 வீதிகளிலும் உள்ள பழைய தார் சாலையை மாற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் புதிதாக வாய்க்கால் கட்டைகள் கட்டும் பணி புதுவை நகராட்சி மூலம் நடைபெறுகிறது. 

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.28 லட்சம் செலவில் நடைபெறும் பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் புதுவை நகராட்சி ஆணையர். சிவக்குமார்,  ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஸ்வந்தய்யா நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம் மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான.கராத்தே சுந்தர்ராஜன்   ராமலிங்கம்,கலியன், சிவராஜ், குணசேகரன், வேலாயுத சுந்தர்ராஜ், ஜெக விநாயகம், பூவராகவன், பீனாராணி, வேல்முருகன், ஜெயபாலன்,ஸ்ரீதர், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News