உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம்

Published On 2022-05-29 14:12 IST   |   Update On 2022-05-29 14:12:00 IST
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கரூர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தை மாநில துணைத்தலைவர் மு.செல்வராணி தொடங்கி வைத்தார்.

 மாவட்டச்செயலாளர் கெ.சக்திவேல் கோரிக்கை விளக்க உரையாற்றினார். 

போராட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.  

ராணுவ தளவாட தொழிற்சாலை, ரயில்வே, ஆயுள் காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு  உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். 

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி பொது விநியோக முறையை சீர்படுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Tags:    

Similar News