உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்ட பத்திரப்பதிவுதுறை அலுவலரிடம் சிவபத்மநாதன் மனு
தென்காசி மாவட்ட பத்திரப்பதிவு துறை அலுவலரிடம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு அளித்தார்.
வீ.கே.புதூர்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மாவட்ட பதிவுத்துறை அலுவலருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்தில் கீழப்பாவூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களின் சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் திருமண பதிவு போன்ற தேவைகளுக்காக கீழப்பாவூர் அருகே உள்ள பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி வந்தனர்.
சார்பதிவாளர் புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டு வருவதாகவும் அதில் கீழப்பாவூர் பேரூராட்சி யினை ஆலங்குளம் சார்பதிவாளர் அலுவல கத்துடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆலங்குளம் பேரூராட்சியானது கீழப்பாவூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ளதால் மக்கள் அங்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமப்படுவர்.பயண நேரமும் அதிகமாகும்.
அதனால் ஏற்கனவே இயங்கி வருவது போல பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைத்திட வேண்டும். பெத்தநாடார்பட்டி வருவாய் கிராமத்தையும் பாவூர்சத்திரத்தில் இருந்து பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆலங்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஆகையால் கீழப்பாவூர் பேரூராட்சி மற்றும் பெத்தநாடார்பட்டி வருவாய் கிராமத்தையும் தற்போது உள்ளபடியே பாவூர்சத்திரம் சார்பதி வாளர் அலுவலகத்தில் இணைத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.