உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை பிணம்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஆண் குழந்தை கொன்று வீச்சு?

Published On 2022-05-28 12:48 IST   |   Update On 2022-05-28 12:48:00 IST
இறந்து போன குழந்தையின் பெற்றோர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக குழந்தையை தண்டவாளங்களுக்கு இடையே வீசி சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து பீகார் மாநிலம் செல்லும் பரவுனி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8 மணியளவில் 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. ரெயில் புறப்பட்டு சென்ற பிறகு போலீசார் தண்டவாள பகுதியில் ரோந்து சென்றனர்.

2-வது பிளாட்பாத்தில் இறுதியில் தண்டவாளங்களுக்கு இடையில் சுமார் ஒரு வயது ஆண் குழந்தை பிணம் கிடந்தது. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இறந்த போன ஆண் குழந்தை மாநிறமாக இருந்தது. கிளி பச்சை பேண்ட் வெள்ளை நிற டீ சர்ட் அணிந்து நிலையில் குழந்தையை முழுவதும் சிறிய கம்பளி போர்வையால் மூலம் சுற்றி வீசியுள்ளனர்.

குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையை கொலை செய்து வீசியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இறந்து போன குழந்தையின் பெற்றோர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக குழந்தையை தண்டவாளங்களுக்கு இடையே வீசி சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News