உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கணேசன்புதூர் மின்நுகர்வோர் மார்ச் மாத கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்

Published On 2022-05-28 12:28 IST   |   Update On 2022-05-28 12:28:00 IST
ஏப்ரல் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே ஜூன் மாதத்திற்கும் செலுத்தலாம்.

தாராபுரம்:

தாராபுரம் மின்சார வாரிய நிர்வாக கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாராபுரம் மின்வாரிய கோட்டம் மூலனூர் பிரிவு அலுலகத்தில் நிர்வாக காரணத்தினால் மே மற்றும் ஜூன் மாத கணக்கீடு செய்ய இயலவில்லை. இதனால் கணேசன்புதூர், எம்.ஜி.வலசு, எம். காளிபாளையம், சமுத்திரவலசு பகுதி மின்நுகர்வோர் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏற்கனவே மார்ச் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே மே மாதத்திற்–கும், ஏப்ரல் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே ஜூன் மாதத்திற்கும் செலுத்தலாம்.

அதே போன்று தாராபுரம் கோட்டத்தில் கள்ளிவலசு பிரிவு அலுவலகத்தில் நிர்வாக காரணத்தினால் மே மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. அதனால் மே மாத கணக்கீட்டு பணியில் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை. ஆகவே மின்நுகர்வோர்கள் மார்ச் மாதம் கட்டிய மின்கட்டணத் தொகையையே மே மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News