உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-05-26 15:44 IST   |   Update On 2022-05-26 15:44:00 IST
சத்தியமங்கலம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

சத்தியமங்கலம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தியமங்கலம் அடுத்த விக்ரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சூர்யா (20). கடந்த 4 மாதமாக சூர்யா பெரியார் நகரில் உள்ள ஆடியோ சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அங்குள்ள குடோனில் தங்கி இருந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மில்மேட்டில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக சீரியல் செட் அமைத்து விட்டு சூர்யா, உடன் வேலை பார்க்கும் சஞ்சய்குமார் என்பவருடன் குடோனுக்கு வந்தார். சஞ்சய்குமார் சாப்பிட சென்றுவிட்டார்.

பின்னர் அவர் வந்து குடோனை பார்த்தபோது  கதவு மூடப்பட்டிருந்தது. கதவை தட்டியுள்ளார் ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதுகுறித்து சஞ்சய்குமார் குடோன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சூர்யா தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சூர்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News