உள்ளூர் செய்திகள்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட போதை பொருட்களையும், அதனை கடத்தி வந்த வாலிபர்களையும் படத்தில் காணலாம்.

ரெயிலில் கடத்தி வந்த போதைப்பொருட்கள் பறிமுதல்

Published On 2022-05-25 15:13 IST   |   Update On 2022-05-25 15:13:00 IST
புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு ரெயிலில் கடத்தி வந்த போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:

புதுவையில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக ஆபரேசன் விடியல் ெதாடங்கப்பட்டது. 

அதன்படி அவ்வப்போது போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசுக்குப்பம் பகுதியில் நடத்தி அதிரடி சோதனையில் பெண் உள்பட 3 ஆப்பிரிக்க நாட்டினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் புவனேஸ்வரில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில் போதை தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி தட்லா தலைமையில் ஓதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்,சப்-இன்ஸ்பெக்டர் முருகன்,சிறப்பு  அதிர டிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், போதை தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் ரெயில்வே போலீசாருடன் இணைந்து  ரெயில் நிலைய
த்தில் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர். 

சோதனை யில் 4 வெளிமாநில பயணிகள் தடை செய்யப்பட்ட போதை ப்பொருட்க ளான பான்பராக், பான்மசாலா, குட்கா உள்ளிட்ட வற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி கடத்தி வந்த 4 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News