உள்ளூர் செய்திகள்
விபத்து

டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி திரும்பிய பெண் விபத்தில் பலி

Published On 2022-05-25 10:59 IST   |   Update On 2022-05-25 10:59:00 IST
மஞ்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக கல்லூரியில் இருந்து வெளியே வந்த பெண் கார் மோதியதில் உயிரிழந்தார்.
செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள அரவங்குறிச்சியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் மனைவி லோகநாயகி(31). இவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். திருச்சியில் இவருக்கு தேர்வு எழுத அழைப்பாணை வந்த நிலையில் அங்கு தேர்வு எழுதச்சென்றார். மணப்பாறை அருகில் உள்ள கருப்பூர் என்ற கிராமத்திற்கு தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சனிக்கிழமை சென்றார்.

மஞ்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக கல்லூரியில் இருந்து வெளியேறினார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த லோகநாயகி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நாம்தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News