உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி அருகே கடையில் புகுந்த பாம்பு பிடிக்கப்பட்ட காட்சி.

நாட்டறம்பள்ளி அருகே டைல்ஸ் கடையில் புகுந்த பாம்பு

Published On 2022-05-24 16:22 IST   |   Update On 2022-05-24 16:22:00 IST
நாட்டறம்பள்ளி அருகே டைல்ஸ் கடையில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்.
ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட கடையின் உரிமையாளர் அலறியடித்து வெளியே ஓடி வந்தார். அதன் பிறகு நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் பாம்புபிடிக்கும் கருவி மூலமாக சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனர்.

அதனை பாதுகாப்புடன் எடுத்து சென்று அருகில் உள்ள காட்டில் விட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும் நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் வெள்லாளனூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் இவர் அரசு பஸ்ஸில் கன்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று இரவு திடீரென பாம்பு புகுந்தது.

இதனால் வீட்டில் இருந்த நடத்துனர் மனைவி தனது கை குழந்தையுடன் வெளியே வந்தார் அதன் பிறகு நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்ததகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி பாம்பு எதுவும் இல்லை என தெரிய வந்தது. இதனால் தீயணைப்பு துறையினர் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News