உள்ளூர் செய்திகள்
புகார்

அதிகாரிகள்-ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்

Published On 2022-05-24 09:42 GMT   |   Update On 2022-05-24 09:42 GMT
அதிகாரிகள்-ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம் என சி.பி.ஐ. அறிவிப்பால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை

மதுரையில் இயங்கி வரும் மத்திய புலனாய்வுத்துறையின் (சி.பி.ஐ.) ஊழல் ஒழிப்பு பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- 

மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், தனிப்பட்ட ஆதாயத்துக்காக தன்னுடைய அலுவலகப்பதவியை தவறாக பயன்படுத்தினால், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியிருந்தால் மதுரையில் இயங்கி வரும் மத்திய புலனாய்வுத்துறையின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம். 

இதுதொடர்பாக புகார்கள் மற்றும் தகவல்களை 89034-83900 என்ற கைபேசி எண், 0452-2562258 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் cbimdu.complaint@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். “ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க முன்வாருங்கள்”. 

ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி லஞ்சம் வாங்கு பவர்களுக்கும், லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய புலனாய்வுத் துறையின் இந்த திடீர் அறிவிப்பு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News