உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே பேய் பிடித்ததாக கூறப்பட்ட பெண் மர்ம மரணம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேய் பிடித்ததாக கூறப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சேமக்கோட்டை கண்ணகி புரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மனைவி சீதா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாக சீதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவருக்கு பேய் பிடித்ததாக கூறி உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் தங்க வைத்தனர்.
நேற்று அங்கு இருந்தபோது சீதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் வழியிலேயே சீதா பரிதாபமாக இறந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து சீதாவின் பெற்றோர் முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்தனர். புகார் மனுவில் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிந்து சீதா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்த உள்ளார்.