உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் தனியார் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-05-23 15:09 IST   |   Update On 2022-05-23 15:09:00 IST
கல்லூரியில் ஊக்கத்தொகை பெறுவதற்கு செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.
கோவை, 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடுகாணியை சேர்ந்தவர் யோகராஜ். இவது மனைவி சசிகலா. இவர் பீளமேடு தண்ணீர் பந்தலில் தங்கி இருந்து அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
 
இவர்களது மகள் குணசிந்து (வயது 20). இவர் நவஇந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று சசிகலா வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் குணசிந்து தனியாக இருந்தார். இவர் தலித் என்பதால் கல்லூரியில்  ஊக்கத்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்குமாறு கல்லூரியில் இருந்து அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. 
 
இதனை பார்த்த குணசிந்து தான் தலித் என்பதை கல்லூரியில் தன்னுடன் படிக்கும் மாண வர்களுக்கு தெரியாமல் பார்த்து வந்தார். தற்போது ஊக்கத் தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைத்தால் தான் தலித் என்பது தெரிந்து விடும் என நினைத்தார். மேலும் தான் தலித் என தெரிந்தால் தன்னை மாணவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என நினைத்து பயந்தார்.
 
இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். ஆனால் இதனை யாரிடமும் அவர் சொல்லவில்லை. திடீரென குண சிந்து வாந்தி எடுத்தார். இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். என்ன என்று கேட்டார். அப்போது தான் விஷ மருந்தை குடித்து விட்டதாக கூறினார். 
 
இதனையடுத்து அவரை அவரது தாய் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு குணசிந்துவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News