உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
பாகூரில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
பாகூர் கிருஷ்ணாநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது 2 பேர் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் பாகூர் பங்களா தெருவை சேர்ந்த சரவணன்(வயது42) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள், 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.32 ஆயிரத்து 250, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.