உள்ளூர் செய்திகள்
பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ெபரியகருப்பன் பேசினார்.

மத்திய அரசிடம் அடகு வைத்த உரிமைகளை தி.முக. அரசு மீட்டு வருகிறது

Published On 2022-05-21 11:35 GMT   |   Update On 2022-05-21 11:35 GMT
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடம் அடகு வைத்த உரிமைகளை தி.முக. அரசு மீட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
சிவகங்கை

சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் நகர தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், எஸ்.ஆர்.பழனிமாணிக்கம் எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அமைச்சர் பெரிய
கருப்பன் பேசியதாவது:- 

தமிழ்தாட்டு மக்களின் பேராதரவுடன் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் 10 ஆண்டு இருளை விரட்டி  புதிய ஒளி தமிழ்நாடெங்கும் பரவி கொண்டிருக்கிறது.ஒவ்வொரு நாளும்  உயர்வான திட்டங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தகுதிமிகு சட்டங்களை, அரசின் அறிவிப்பு
களை, முழுமையாக செயல்படுத்தும்  அர்ப்பணிப்பு, கடைசி மனிதருக்கும் பலன்கள் கிடைத்திடும் வகையில் கட்டமைப்பு, அவற்றின் மீதான கண்காணிப்பு என இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்று பெருமிதம் கொள்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. தலைவர் கலைஞரின் 50 ஆண்டு கால நீண்ட அரசியல் அனுபவம்போல மு.க.ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார். 

தி.மு.க.வின் கொள்கையான உண்மைக்கு, உரிமைக்கு குரல்கொடுப்போம் என்ற ரீதியில்ல்லாவற்றையும் எதிர்ப்போம் என்றில்லாமலும் அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் சமரசமாக சென்றுவிட முடியாது என்கிற அடிப்படையில்தான் கடந்த அரசு 10 ஆண்டுகளில் ஒவ்வொன்றாக அடகுவைத்து சென்ற உரிமைகளை எல்லாம் தற்போதைய தி.மு.க. அரசு மீட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, சிவகங்கை நகர்மன்ற துணை தலைவர் கார்கண்ணன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன்,  நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராமதாஸ், கார்த்திகேயன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News