உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கடலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் 7648 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை- கலெக்டர் தகவல்

Published On 2022-05-21 11:32 GMT   |   Update On 2022-05-21 11:32 GMT
550 வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு ரூ.52 லட்சத்து 26 ஆயிரம் செலவில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்று, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் 2021-2022ஆம் நிதியாண்டில், 825 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.30. லட்சத்து 84 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், 93 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 4 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் மாவட்டத்தில் இயங்கும் 29 தொண்டு நிறுவனங்களுக்கு உணவூட்டு மான்யம் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யமாக ரூ.2 கோடி 52 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

7648 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.14 கோடி 94 லட்சத்து 61 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 590 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கோடி 10 லட்சம் 90 ஆயிரம் செலவில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமண உதவித்தொகையாக 16 மாற்றுத்திறனாளிகளுக்கு 7 லட்சம் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிவதற்கு 14 இலட்சம் வங்கி கடன் மானியமாக 61 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 550 வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு ரூ.52 லட்சத்து 26 ஆயிரம் செலவில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News