உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் அருகே கே.என்.பேட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பார்த்திபன். இவர் டிப்ளமோ படிப்பு முடித்து கடந்த ஒரு மாதமாக கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களாக பார்த்திபன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இதனால் முருகன் மகன் பார்த்திபனை கண்டித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த பார்த்திபன் தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து பார்த்திபனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பார்த்திபனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.