உள்ளூர் செய்திகள்
சாரதா கங்காதரன் கல்லூரியில் தேசிய மதிப்பீட்டு தரச்சான்று குழுவினர் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

சாரதா கங்காதரன் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு தரச்சான்று

Published On 2022-05-21 10:08 GMT   |   Update On 2022-05-21 10:08 GMT
புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரியை தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று குழு 2-ம் சுற்றாக ஆய்வு செய்தது.
புதுச்சேரி:

புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரியை தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று குழு 2-ம் சுற்றாக ஆய்வு செய்தது.

உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சத்ய நாரா யணா, டெல்லி பல்கலைக் கழகத்தின் நிதி மேலாண்மை துறை பேராசிரியர் சந்திர குப்தா, பஞ்சாப் ஜலந்தர் எஸ்.டி. கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிரண் அரோரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவின் வழி காட்டுதலுடன்  7 அளவு கோல்களை அடிப்படையாக ெகாண்டு நடத்தப்பட்டது.

கற்பித்தல், கற்றலில் 3.33 புள்ளி, உள் கட்டமைப்பு, கற்றல் வளங்களில் 3.06 புள்ளி, மாணவர் ஆதரவு மற்றும் முன்னேற்றத்தில் 3.04 புள்ளிகள் என 7 அளவு கோள்களில சராசரியாக 2.92 புள்ளிகளை பெற்று பி பிளஸ் பிளஸ் தரச் சான்றுக்கு இக் கல்லூரி தகுதி பெற்றுள்ளது. 

புதுவை மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்ந்த மதிப்பெண் பெற்று பி பிளஸ் பிளஸ் தரச் சான்றை பெற்ற கல்லூரி என்ற சிறப்பினை சாரதா கங்காதரன் கல்லூரி பெற்றுள்ளது.
இதையொட்டி கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கல்லூரி துணைத் தலைவர் சு .பழனிராஜா பாராட்டினார்.
Tags:    

Similar News