உள்ளூர் செய்திகள்
நவீன தொழில்நுட்பத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்திய காட்சி.

நவீன தொழில்நுட்பத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சோதனை

Published On 2022-05-21 09:49 GMT   |   Update On 2022-05-21 09:49 GMT
நவீன தொழில்நுட்பத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சோதனை நடத்துவது குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

வில்லியனூர் பகுதியில் கழிவுநீர் தொடர்ந்து சங்கராபரணி ஆற்றங்கரையில் கலக்கிறது. இதனை சுத்திகரிப்பு செய்து நல்ல நீராக மாற்றி மீண்டும் ஆற்றில் விட புதிய தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் படி  கோட்டைமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் வில்லியனூர் கழிவுநீர் வாய்க்கால் இணைப்பு இடத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் ஆற்றில் விட புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படுத்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் சோதனைகளை ஆய்வு செய்தார். முன்னாள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரும் ஆதித்யா கல்வி குழும தலைவருமான ஆனந்தன் உடனிருந்தார். 

இத்திட்டத்தை சி.எஸ்.ஆர். ரீதியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
தொடர்ந்து ஜப்பான் தொழில்நுட்பத்துடன் இணைந்து அதற்கான செலவுகளை உத்தேசிக்கப்பட்டு சுமார் 6 இடங்களில் இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News