உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பு பிடிபட்டது படத்தில் காணலாம்

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பு பிடிபட்டது

Published On 2022-05-20 15:53 IST   |   Update On 2022-05-20 15:53:00 IST
அரக்கோணம் அருகே வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பு பிடிபட்டது.
அரக்கோணம் :

அரக்கோணம் காஞ்சிபுரம் சில்வர் சர்ச் நெடுஞ்சாலையில் நேற்று இரவு நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தபடி ரோட்டின் குறுக்கே ஊர்ந்து சென்றது. அப்போது அருகே உள்ள ரகுமான் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன்றது. 

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பாம்பை விரட்ட முயற்சி செய்தனர்.உடனடியாக அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 5 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனர். பாம்பு படம் எடுத்து ஆடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News