உள்ளூர் செய்திகள்
மதிகோன்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் சாவு
மதிகோன்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் பலியானார்.
தருமபுரி,
தருமபுரி அருகேயுள்ள மதிகோன்பாளையம் ஜங்சன் சாலை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது53). இவர் இன்று காலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாந்தி மீது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சாந்தியை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.