உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சரள் மண் கடத்தி சென்ற லாரி பறிமுதல்

Published On 2022-05-20 14:59 IST   |   Update On 2022-05-20 14:59:00 IST
பழவூர் அருகே சரள் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
வள்ளியூர்:

பழவூர் அருகே கூட்டப்புளி விலக்கில்  ராதாபுரம் தாசில்தார் ஏசு ராஜன், துணை தாசில்தார் வில்லுடையார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். உடனே லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர்  தப்பி ஓடி விட்டார்.

அந்த லாரியை சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணம் இல்லாமல் சரள் மண் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து பழவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News