உள்ளூர் செய்திகள்
சூறைகாற்று காரணமாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள், வலைகளை பராமரிக்கும் பணியில் மீனவர்கள்.

மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2022-05-20 09:19 GMT   |   Update On 2022-05-20 09:23 GMT
வேதாரண்யத்தில் சூறை காற்று வீசுவதால் மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம்:

 வேதாரண்யம்  பகுதியில் தொடர்ந்து கச்சன் காற்று எனப்படும் சூறை காற்று வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

இதனால் மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை .ஆறுகாட்டுத்துறை, புஷ்ப வனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை, மணிய ன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குசெல்லவில்லை.

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துவிட்டு மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களின்றி மீன் ஏலகூடம் மற்றும் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து ஆறுகாட்டுதுறை கிராம பஞ்சாயத்தார் முருகையன் கூறுகையில் இந்த கச்சன் காற்று தொடர்ந்து ஒரு வாரம் வீசும்எனவும் அதுவரை மீன்பிடிக்க செல்ல இயலாது என்றும்  தற்போது அதிக அளவில் மத்தி மீன் கிடைத்துவந்த நிலையில் இந்த சூறாவளி காற்றினால் மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது எனதெரிவித்தார்.
Tags:    

Similar News