உள்ளூர் செய்திகள்
பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.

மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்- வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-05-20 09:18 GMT   |   Update On 2022-05-20 09:18 GMT
இந்து சமய பண்பாட்டு பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வாழைக்குளம் பகுதியில் கல்வி பயிற்சி மையத்தில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதனை வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை  தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிஷத் லட்சுமிநாராயணன், அகில பாரதீய வித்யார்தி பரிஷத் ராம் ஆகியோர் பங்கேற்று பயிற்சி வகுப்பை நடத்தினர்.

ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா தலைவர் நாகராஜன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் பாண்டியன், கதிரவன், மாலதி, முத்துக்குமார், உமாமகேஸ்வரி, பட்டாபி, இளவரசன், அருண்குமார், கருணாகரன், சதீஷ்குமார், ராம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்தப பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், ஸ்கெட்ச் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இந்த நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்தனர்.
Tags:    

Similar News