உள்ளூர் செய்திகள்
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பாறை குழிகள் மூடல்
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பாறை குழிகள் மூடப்பட்டன.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் கல் குவாரி மற்றும் கல் உடைக்கும் தொழிலாளி கள் அதிகம் வசிக்கும் பகுதியாக துவாக்குடி நகராட்சி உள்ளது. இப்பகுதியில் துவாக்குடி வடக்கு மலை , தெற்கு மலை, செடிமலை முருகன் கோவில் தெரு உட்பட பகுதிகளில் சுமார் 35க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகள் 50 ஆண்டுகால பழமையானது ஆகும். இதில் சில கல்குவாரிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன.
இது குறித்து துவாக்குடி நகர்மன்ற தலைவர் காயாம்பு மற்றும் செயற்பொறியாளர் விஜய கார்த்தி ஆகியோரிர் கூறுகையில், இப்பாறை அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் நபர்கள் இப்பாறையில் விழுந்து உயிர் இழப்பு ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதால்,
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் இந்த பாறை மூடப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சியில் முன்பு கல்குவாரியாக செயல்பட்டு, தற்போது கைவிடப்பட்ட பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய
கண்ணனூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள 2 பாறை குழிகளையும் மடும் பணி நடைபெறுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த பாறை குழிகள் மூடப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தால் கட்டிடமோ அல்லது பூங்காவோ அமைப்பதற்காக இந்த பாறை குழிகள் மூடப்படவில்லை என்றனர்.